எல்டிடிஇ ராணுவம் உலகிலேயே மிகவும் ஒழுக்கம் வாய்ந்தது என்பதைக் கூற எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய  அதிகாரி உண்ணி கார்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும் எல்டிடிஇ  ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்தபோது  கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1089 ஆம் ஆண்டு வரை அங்கு அமைதியை ஏற்படுத்துவதாக கூறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவின்பேரில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது.

இந்த இரண்டுஆண்டுகளில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் உண்ணி கார்தா. இவரும் அமைதிப்படையில் இருந்த மேலும் 9 பேர் கொண்ட குழு ஒன்றும் அண்மையில் இலங்கை சென்றது.

பின்னர் இந்தக்குழு இந்தியா திருப்பியபோது ராணுவ அதிகாரி,  இலங்கைக்கு அமைதிப்படை சென்றது உள்ளிட்ட பல விஷயங்களை செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார்.

அப்போது எல்டிடிஇ ராணுவம் , உலகிலேயே மிகவும் ஒழுக்கம் வாய்ந்தது என்பதைக் கூற எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என தெரிவித்தார். அவர்களின்  கட்டுப்பாடு நிறைந்த  வாழ்க்கை முறை, ராணுவத்தில் பெண் போராளிகள் இருந்தபோதும்  அவர்களிடம் புலிகள் ஒழுக்கத்துடன்  நடந்து கொண்டது போன்றவை தன்னை பிரமிக்க வைத்தாக தெரிவித்து எல்டிடிஇக்கு புகழாரம் சூட்டினார்.