Asianet News TamilAsianet News Tamil

21 ஆண்டுகள் ஆச்சு! கொத்தடிமைகள் போல் நடத்துராங்க! டாஸ்மாக் ஊழியர்கள் 27,000 பேருக்கு குரல் கொடுக்கும்! சீமான்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கையாகும். 

Increase salary of Tasmac employees - seeman demand
Author
First Published Apr 13, 2023, 6:59 AM IST | Last Updated Apr 13, 2023, 7:16 AM IST

டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக் கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. 21 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்படும்... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு!!

Increase salary of Tasmac employees - seeman demand

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.

Increase salary of Tasmac employees - seeman demand

கடந்த 21 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிவரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.

இதையும் படிங்க;- 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.! திமுக கவுன்சிலரை குண்டர் சட்டத்தில் கைது செய்திடுக- அன்புமணி ஆவேசம்

Increase salary of Tasmac employees - seeman demand

மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனைக் கூட ஊழியர்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை இனியும் காலந்தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 11.04.2023 அன்று திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவினை அளித்து, கோரிக்கைகள் வெல்ல துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என  சீமான் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios