நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏராளமான மையங்கள் திறக்கபட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளுடன், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களும் கொரோனா பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சிய்ல் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றில் தவறான பரிசோதனை முடிவுகள் வழங்கபட்டுள்ளன. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் ஆய்வகத்திற்கு ( டாக்டர் டயக்னோஸ்டிக் செண்டர்) கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கபட்டிருந்தது.

அந்த மையத்தில் எடுக்கப்படும் பரிசோதனைகளில் தவறான முடிவுகள் எடுக்கபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நகர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதில் பலருக்கு பரிசோதனை முடிவுகள் முரணாக வந்தது தெரிந்துள்ளது.

இதனை  தொடர்ந்து அந்த் ஆய்வகத்திற்கு மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக கொரோனா பரிசோதனைக்கு தடை விதித்தார். தற்போது அங்கு கொரோனா பரிசோதனை நிறுத்தபட்டுள்ளது.