Income tax waiting to Send inquiry letter to Dinakaran
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி போலீசார் தினகரனை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தினகரனுக்கு 60 கோடி ரூபாய் வந்தது எப்படி? என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரி துறை முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த தினகரன், அதில் தமது சொத்து மதிப்பு 70 லட்ச ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி உள்ளார்.

மேலும், இடை தரகர் சுகேஷ் சந்திராவிடம் பறிமுதல் செய்த 1 கோடியே 30 லட்ச ரூபாய், தினகரன் தமக்கு முன் பணமாக கொடுத்ததாக, போலீசாரிடம் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
எனவே, தினகரனுக்கு அந்த தொகை எப்படி வந்தது? என விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப வருமானவரி துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போலீசார் மீண்டும் தினகரனை விசாரணை செய்ய உள்ளதால், அதில் சில அமைச்சர்களும், அவரது உறவினர்கள் சிலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
