நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் (கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) வருமானவரித் துறை அதிகாரிகள் 2 வது நாளாக சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர். 

நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் என்ற பெயரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு  நீட் கோச்சிங் செண்டரும் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து நேற்று, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள் தலா 5 நபர்கள் என 10 குழுக்களா பிருந்து வருமானவரிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பள்ளிக்கூட வளாகம் மற்றும்,  நீட் கோச்சிங் செண்டர்,  பள்ளியின் தாளாளரின் வீடு, மற்றும் பள்ளிக்கூடத்தின் இயக்குனர்களின் வீடு என அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று நள்ளிரவை தாண்டியும் சோதனை நடைபெற்றது.  தமிழக அளவில் மிகவும் பிரபலமான இப்பள்ளியில்  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த உயர் அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள், இன்னும் பிற பிரபலங்களின் வாரிசுகள் 11 மற்றும் 12 வகுப்புகளில் படித்து வருவதுடன், நீட் பயிற்சியில் சேர்ந்தும்  படித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது. 2 வது நாளாக நடைபெற்று வரும் இச்சோதனையில்  கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.