அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் நயினாரினி திருவல்லிக்கேணி வீட்டில் இருந்து 2 கோடியே 20 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சேப்பாக்கம் எம்எல்ஏ ஹாஸ்டலில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரம் இடைத் தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதற்கு என்ன காரணம் என்பத குறித்து விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு, அவரது உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விஜய பாஸ்கரின் உதவியாளர் நயினார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது கணக்கில் காட்டாத 2 கோடியே 20 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.அந்த பணம் குறித்து நயினாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போன்று சேப்பாக்கத்தில் உள்ள விஜய பாஸ்கர் அறையில் கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் அனைத்தும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.