நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும்  அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை அதிரடியாக புகுந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.