செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்... கரூரில் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவில் திடீர் ஐ.டி ரெய்டு

கரூரில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரி சொத்து மதிப்பிட்டு குழு ஆய்வு செய்து வருகின்றனர். 

Income Tax department raids the house being built by Senthil Balaji brother in Karur KAK

செந்தில் பாலாஜிக்கு செக்

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. முன்னதாக கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்  வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி சென்றனர்.

Income Tax department raids the house being built by Senthil Balaji brother in Karur KAK

புழல் சிறையில் செந்தில் பாலாஜி

குறிப்பாக,  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணியின்  கரூர்  கொங்கு மெஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது, தொடர்ந்து சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், கணினி ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர்.  அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட உள்ள நிலையில்,ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்து வருகின்றனர். ஜாமீன் மீதான மனு விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

மீண்டும் களத்தில் வருமான வரித்துறை

இந்நிலையில் நேற்று வந்த வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழு செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி அவரது அலுவலகம் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் ஆடம்பர பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வுப் பணிகள் ஈடுபட்டு வருகின்றார். இரண்டு கார்களில் வந்த 9 அதிகாரிகள் தற்போது அளவீடு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் கரூரில் முகாமிட்டு சோதனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios