Asianet News TamilAsianet News Tamil

ஸ்கெட்ச் போட்டு வளைத்த வருமானவரித்துறை.. விஜய் மாமாவுக்கு ஆப்பு.. ஆடிப்போன எஸ்ஏசி.

அந்த நிறுவனத்தில் செயல்பாடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல் கடற்கரைச் சாலையில் உள்ள நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள குடோனில் நேற்று மாலை வரை சோதனை நடந்தது. 

Income tax department Raid .. Wedge for Vijay uncle .. SAC Shocking.
Author
Chennai, First Published Dec 22, 2021, 11:45 AM IST

நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரான மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் -விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். அத்திரைப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டவர் எஸ்.ஏ சந்திரசேகரின் மைத்துனரும் விஜயின் மாமாவும் ஆகிய சேவியர் பிரிட்டோ ஆவர்.

இவர் லயோலா கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றியவர் ஆவார். ஒரு சாதாரண ஆசிரியையின் மகனாக பிறந்து வளர்ந்த பிரிட்டோ பின்னர் அவரது அம்மாவின் நினைவாக ஒரு கிண்டர் கார்டன் பள்ளியை ஆரம்பித்து, அதன் மூலம் மெல்ல மெல்ல தனது வியாபாரத்தை விரிவு படுத்தியவர் ஆவார். பின்னர் அது நாளடைவில், இன்ஃபினிட்டி எஸ்தெல் உணவகங்கள், LLP எஸ்தெல் ரீக்ளைம் பிரைவேட் லிமிடெட், Indev in Time Air Cargo Services Private Limited என்ற ஏற்றுமதி இறக்கு மதி நிறுவனம். கெர்ரி இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், பி.எஸ்.வி.ஷிப்பிங் ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட், எண்ணூர் கார்கோ கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட், இன்டெவ் ஷிப்பிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்தெல் குளோபல் இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட், டைம்லேப்ஸ் இன்ஃபர்மேடிக்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமி, டெட் ஹவ்டி வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என தனது பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை சர்வதேச விரிவு படுத்தி கால்பரப்பியுள்ளார் சேவியர் பிரிட்டோ. 

Income tax department Raid .. Wedge for Vijay uncle .. SAC Shocking.

ஒருவகையில் நடிகர் விஜயின் சம்பளத்தை உயர்த்தியதிலும், அவரின் அசுர வளர்ச்சிக்கும் சேவியர் பிரிட்டோ முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்றும் கூறலாம். தமிழ் திரையுலகின் தற்போதைய முன்னணி கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய்தான். அவரது படங்களில் உலகளாவிய வசூல் உள்ளிட்டவற்றை கணக்கில்கொண்டு சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், சேவியர் பிரிட்டோ மாஸ்டர் திரைப்படத்திற்கு அவருக்கு 80 கோடி ரூபாய் சம்பளத்தை அள்ளி வழங்கினார். அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உறவினர் என்பதால் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறீர்களா என ஊடகங்கள் பிரிட்டோவிடம் கேள்வி எழுப்பின. அதற்கு, இன்று நல்ல வியாபாரம் இருக்கும் நாயகர்களில் நடிகர் விஜய் ஒருவர்.

அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதுதான். வெள்ளி, தங்கம், வைரம் என ஒவ்வொன்றுக்கும் மதிப்பு மாறுகிறதா இல்லையா? அதுபோலத்தான் வைரத்திற்கு அதிக விலை தரப்படுகிறது. அப்படித்தான் விஜய் ஒரு வைரம்.. விஜய் கேட்கும் சம்பளம் நியாயமானதுதான். பல வெற்றி படங்களை தந்திருக்கிறார், பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் இது சாதாரணமாக வந்தது அல்ல பல ஆண்டுகள் கடின உழைப்பால் வந்தது அதற்கு இவ்வளவு விலை கொடுக்கத்தான் வேண்டும் என விஜய்க்கு சம்பளத்தை நியாயப்படுத்திப் பேசியவர்தான் இந்த பிரிட்டோ.. தனது உறவினர் என்பதால் சேவியர் பிரிட்டோ கதைஅளக்கிறார் என அவர்மீது இப்போதும் விமர்சனம் இருந்து வருகிறது. அதேபோல் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, சேவியர் பிரிட்டோவிடத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். நடிகர் விஜயின்  பினாமி என்றும் அவர் மீது அப்போது சத்தேகம் எழுந்தது.

Income tax department Raid .. Wedge for Vijay uncle .. SAC Shocking.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் நேற்று காலைமுதல் இருந்தே (xiaomi)ஷியோமி நிறுவனத்தின் விற்பனை தொடர்பாகவும், அந்நிறுனத்தின் வருமானவரி கணக்கு தொடர்பாகவும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 25 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சோதனை தொடர்ந்தது. சீன நிறுவனமான ஷியோமிக்கு சொந்தமான பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் சியோமி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்தனர். அதில் விஜயின் மாமா சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் முதலிடத்தில் இருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் ஷியாமி நிறுவனத்துடன் தொடர்புள்ள ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களில் இன்று வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்கம் கையாளும் வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Indev logistics Private Limited நிறுவனத்தின் அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நிறுவனத்தில் செயல்பாடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல் கடற்கரைச் சாலையில் உள்ள நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள குடோனில் நேற்று மாலை வரை சோதனை நடந்தது. அந்நிறுவனம் அதிகளவில் வரியேய்ப்பு செய்திருப்பதாக வந்த தகவல் அடுத்தே சோதனை நடைபெற்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சேவியர் பிரிட்டோவுக்கு கப்பல் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Income tax department Raid .. Wedge for Vijay uncle .. SAC Shocking.

இந்நிலையில்தான் இவருக்கு சொந்தமான அடையாறு இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. XB film creator என்ற பெயரில் இவரது தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். மாஸ்டர் படம் தயாரித்துடன் விஜயுடன் செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் போன்ற படங்களுக்கும் தயாரிப்பாளராக இருந்தவர்  பிரிட்டோ ஆவார். இவரின் வீடு தவிர்த்து சென்னை மற்றும் பெங்களூரில் இருக்கும் அவரின் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னை அடுத்து இருக்கும் திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றை அவர் கட்டி வருகிறார் என்பது சமீபத்தில் அந்த பள்ளியை விஜய்யுடன் தொடர்பு படுத்தி சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios