income tax department palnning enquiry ministers including edappadi
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு விட்ட வருமான வரி அதிகாரிகள், மேலும் ௯ பேரிடம் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலரை வளைத்து பிடிக்க மணல் மன்னன் சேகர் ரெட்டியின் வாக்கு மூலம் ஒன்றே போதுமானதாக உள்ளது.
மேலும், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்தும் அவ்வப்போது தரப்படும் தகவல்கள் அதை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆதாரங்களை எடுத்துப் போட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு, துளைத்து எடுத்துள்ளனர் வருமானவரி அதிகாரிகள்.

அதனால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி பல தகவல்களை ஒப்பித்துள்ளார் விஜயபாஸ்கர். அவர் கூறியதில் இருந்தும், ஏற்கனவே சேகர் ரெட்டியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும், முதல்வர் உள்பட 9 அமைச்சர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் வருமானவரி துறை அதிகாரிகள்.
அதனால், அந்த 9 அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், எப்போது வேண்டுமானாலும் ரைடுகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து, முதல்வர் எடப்பாடி மற்றும் இதர அமைச்சர்கள், வெலவெலத்து போயுள்ளனர்.
குறிப்பாக குடியரசு தலைவர் தேர்தல் நடப்பதற்கு முன் இந்த ரைடுகள் அனைத்தும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
