Income Tax Department officials said that Vivek will continue the night and day at home.

விவேக் வீட்டில் இரவு மற்றும் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 

இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி ஜெயா டிவி சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 13 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது. 

இதில் மன்னார்குடியில் திவாகரன் ஆதரவாளர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது. ஆதரவாளர்கள் செல்வம், பேராசிரியர் அன்புக்கரசி வீடுகளிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

ஆனால் மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டில் இரவு மற்றும் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.