In the wake of a serious campaign in support of ARENA opies Madhusudana

ஆர்.கே.நகரில் அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும் என சுயேட்சைகள் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே உண்மையான அதிமுக நாங்களே எனவும், கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும், ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையரிடம் ஒ.பி.எஸ் தரப்பினர் மனு அளித்தனர்.

இதில் சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் கடும் போட்டி நிலவியதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற கட்சியின் பெயரில், மின்கம்பம் சின்னத்தின் கீழ் மதுசூதனன் போட்டியிடுகிறார்.

மதுசூதனனை ஆதரித்து ஒ.பி.எஸ் நேற்று ஃபேஸ்புக்கில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தனது ஃபேஸ்புக்கின் முதல் பதிவாக சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி எனவும், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இணைந்து செயல்படுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து இன்று ஆர்.கே.நகரில் அதிமுக புரட்சி தலைவி அம்மா சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து 39-வது வட்டம் நாகூரான் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். இதற்கு ஆர்.கே.நகர் மக்களின் ஆதரவு பெருவாரியாக கிட்டியதால் வெற்றி உறுதி என மதுசூதனன் படு குஷியில் உள்ளார்.

இதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மா பா பாண்டியராஜன், உள்பட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், பிற அணி மாவட்ட நிர்வாகிகள் மகளிரணியினர், மாணவரணியினர், பிற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரித்தனர்