Asianet News TamilAsianet News Tamil

இதை செய்யலன்னா பாராளுமன்ற தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் ;  - கணித்து சொல்லும் திருமா...!

In the next parliamentary election the secular forces will not be uneconomic if no one can stop the BJP rule
In the next parliamentary election, the secular forces will not be uneconomic if no one can stop the BJP rule
Author
First Published Dec 18, 2017, 4:43 PM IST


அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணையாமல் சிதறினால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக  முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல், ஹிமாச்சல் மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியை பிடித்தது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணையாமல் சிதறினால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு இந்த முடிவுகள் சவாலாக அமைந்துள்ளதாகவும், இந்திய அளவில் மதசார்பற்ற கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை இப்போதிருந்தே திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு அதிருப்தி இருந்தாலும், மீண்டும் மீண்டும் பா.ஜனதா வெற்றி பெறுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் இதுதான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் சேதி எனவும் தெரிவித்துள்ளார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios