In tamil nadu next DMK rule...Kadar moideen speech

சமூக நீதியை காத்த மாபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி என்றும் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக பணியாற்றுவர் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில், ராகுல் காந்தி உட்பட பல வட இந்திய தலைவர்கள் பங்கேற்று கருணாநிதிளை வாழ்த்திப் பேசினர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கருணாநிதியை வெகுவாகப் பாராட்டி பேசினார்.


அப்போது தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை நிலைநிறுத்திய திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது தி.மு.க. தான் என்றும் அவர் கூறினார்.சமூக நீதியை காத்த மாபெரும் தலைவர் கலைஞர் என்றும் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக முதல்வராக பணியாற்றுவர் என்றும் தெரிவித்தார்.

இந்த நூற்றாண்டில் நிகரற்ற தலைவராக உள்ளவர் கருணாநிதி என்றும் காதர் மொய்தீன் பாராட்டுத் தெரிவித்தார்.