In tamil nadu helicopter tourism will be started told central minister

தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்க உள்ளதாகவும், குறிப்பாக மதுரை உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என மந்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை ஊக்கும்விக்கும் வகையில் மத்திய அரசு ‘பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்னும் ஹெலிகாப்டர் சேவையை நடத்தி வருகிறது. இந்த சேவை ஏற்கனவே இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த ஹெலிகாப்டர் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இச்சேவையை தொடங்குவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகத்தின் பல நகரங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், மத்திய அரசு நிறுவனமான பவான் ஹன்ஸ் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்டது.



சுற்றுலா பயணிகளுக்கான இந்த சேவையை குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்குவது குறித்த வாய்ப்புகள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முதல் கட்ட அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்துக்கு விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கிடைக்கும் என தெரிவித்தார்..