நாகப்பட்டினம்,  கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப் போவதாக தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்துது. இதுகுறித்து அரசிதழிலும் வெளியிட்டது.  இதனால், மக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவும், கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக கடந்த 3 மாதங்களாகவும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்த வேளையில், பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் வெளியானதும் டெல்டா மாவட்ட மொத்த மக்களையும் கொதிப்படைய செய்துள்ளது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்களை சந்தித்து கருப்பு கேட்பு கூட்டம் நடத்தினார்.

நாகை மாவட்டத்தில் சின்ன பெருந்தோட்டத்திலும் மாதானம், பழையபாளையத்தில், மக்களை இன்று நேற்று அவர் சந்தித்தார். அப்போது, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.  சந்திப்பில், தி.மு.க, காங்கிரஸ்.கம்யூனிஸ்ட் கட்சி யின் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

அப்போது, திருமாவளவன் பேசுகையில், சிதம்பரம், கடலூர், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் உள்ள 45 கிராமங்களை தேர்வு செய்து 25,683 சதுர கி.மீ. பரப்பளவில் அதாவது 57500 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவேலையை துவங்கியிருப்பதாக தெரிகிறது.

இந்த திட்டம் ரூ.92 160 கோடி முதலீட்டில் செயல்படுத்த உள்ளனர். இந்த திட்டத்திற்கு சாலைகள், ரயில் தண்டவளங்கள், விமானம், துறைமுகம் பணிகள் உள்ளிட்ட  பணிகளுக்கு ரூ.13,354   கோடி நிதி ஒதுக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகள் நடக்கிறது.

3  போகம் டெல்டா மாவட்டம் இன்று ஒரு போகமாக சுறுக்கி, அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத நிலையாகி விட்டது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே, மக்களை சந்தித்து கருத்தை கேட்டபிறகு,  தோழமை கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திருவெண்காடு அருகே 10 கிராம விவசாயிகள் மற்றும் திமுக,  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியினர் உள்பட பலரும் கருத்து கூறியுள்ளனர். 2 மாவட்டத்தில் கருத்து கேட்பு முடிந்து அடுத்த கட்டமாக மக்களை திரட்டி, பெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும்.

வரும் செப்டம்பர் 17ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த இருக்கிறோம். அதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தோழமை கட்சிகளை அழைக்கும் முயற்சியில் உள்ளோம். அப்போது இது குறித்து பேசி, அடுத்த கட்ட அனைத்து கட்சி போராட்டம் நடத்கப்படும்." என கூறினார்.