In both cases we have a favorable results - Minister Jayakumar

துணை முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுவைவையும், சட்டமன்றத்தில் ஜெ. உருவப்படம் திறக்கப்பட்டது குறித்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது என்றும், பாலும் பழமும் கிடைத்ததுபோல் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம் உள்பட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 11 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்தனா். இதனைத் தொடா்ந்து அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீா் செல்வம் உள்பட நம்பிக்கை இல்லை என்று வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினா்களையும் கட்சி தாவல தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை
உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அரசியலில் பெசிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து ஓபிஎஸ், அமைச்சர் மாபா பாண்டியராஜன், மற்றும் 11 எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.

இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில், அவரது புகைப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். சட்டப்பேரவையில் ஜெ. புகைப்படம் திறக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சபாநாயகர் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, இரண்டு வழக்கிலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. பாலும் பழமும் கிடைத்ததுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.