இவ்வளவு போட்டிகளுக்கு இடையே ரகுமான் கான் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி கிடைத்தது எப்படி? பரபர தகவல்.!
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளராக டாக்டர் மஸ்தான் சமீபத்தில் காலமானார். அதன் பிறகு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது.
மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் மகனுக்கு மாநில அளவிலான முக்கிய பதவியை திமுக தலைமை வழங்கியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளராக டாக்டர் மஸ்தான் சமீபத்தில் காலமானார். அதன் பிறகு திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்த இடத்தை பிடிக்க திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் பலரும் போட்டி போட்டனர். இந்நிலையில் டாக்டர் சுபேர் கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் அ.சுபேர்கான் எம்.எஸ்.ஆர்த்தோ( ஆர்த்தோமெட் மருத்துவமனை இராயப்பேட்டை சென்னை14) அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அதற்கு பதிலாக திமுக சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு செயலாளராக நியமிக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.
ரகுமான்கான் மகன் டாக்டர் சுபேர்கான், சென்னையில் புகழ்பெற்ற எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக (Ortho Surgeon) உள்ளார். தந்தையைப் போலவே திராவிட இயக்க உணர்வு-தமிழ் மொழிப்பற்று கொண்டவர். மேலும், அரசியலில் சிறப்பாக செயல்பட்டு தலைமையின் கவனத்தை ஈர்த்தன் காரணமாகவும், குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் தயவில் சுபேர் கானுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.