Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Important Notice to Government School Students ... Explanation of Minister Senkottaiyan
Author
Tamil Nadu, First Published Jul 9, 2020, 10:53 AM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Important Notice to Government School Students ... Explanation of Minister Senkottaiyan

அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் போதிய வசதிகள் இல்லாததால் ஏழைமாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் , ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கூறுகையில், ’’தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.Important Notice to Government School Students ... Explanation of Minister Senkottaiyan

12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்’’என அவர் தெரிவித்துள்ளார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios