ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

அப்போது போசிய ஸ்டாலின்,  தியாகி இமானுவேல் சேகரன் தீண்டாமையை ஒழிக்க போராடியவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். 1950-ம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டவர். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தி அதற்காக போராடி வெற்றி கண்டவர் என தெரிவித்தார்.

அமமுக  சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜனதாவினரும் அஞ்சலி செலுத்தினர்.