என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ.. கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கணும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். 

illicit liquor deaths issue... Minister Senthil Balaji action order

மதுவில்லா நாட்கள்  மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை, தலைமைச் செயலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேசுகையில்;- தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையாக பெறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும் தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதனை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இதையும் படிங்க;- டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி! பதவி நீக்கம் செய்யுங்கள்! தஞ்சை பார் மரணத்திற்கு பதில் என்ன? கிருஷ்ணசாமி ஆவேசம்.!

illicit liquor deaths issue... Minister Senthil Balaji action order

மேலும், டாஸ்மாக் கடைகள், எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல், NDRC உரிமதலங்கள் ஆகியவற்றை கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அலுவலர்கள் கலால் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, காவல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

illicit liquor deaths issue... Minister Senthil Balaji action order

மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் (Clubs) மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் மூடப்படுக்கிறதா என்பதை களஆய்வு மேற்கொள்ள வேண்டும், மதுவில்லா நாட்கள் (Dry days) மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். 

இதையும் படிங்க;-  கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் பலி! செந்தில் பாலாஜி,ஸ்டாலின் குடும்பமே பொறுப்பு! ஷ்யாம் கிருஷ்ணசாமி

illicit liquor deaths issue... Minister Senthil Balaji action order

மேலும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், மனித சங்கிலி பேரணிபோன்றவற்றின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல், துண்டு பிரசுரம், கட்டுரைப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios