தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. அதிமுகவுக்கு பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட்டன. இந்த இடைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இந் நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. என அதிரடியாக தெரிவித்தார்.