கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாட்டுக்கு என்றும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படவேண்டும் எனவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகின்றது. 
அதன் ஒரு பகுதியாக சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்று வருகின்றது. 
இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், நீர்நிலைகளால் சூழப்பட்டது கடலூர் மாவட்டம் எனவும், கடலூரில் தான் ஜெயலலிதாவை எம்ஜிஆர் அறிமுகம் செய்தார் எனவும் புகழாரம் சூட்டினார். 
ஜெயலலிதா தனது அரசியல் பயணத்தை கடலூரில் தான் தொடங்கினார் எனவும், கட்சியை வழிநடத்த தொண்டர்களுக்கே உரிமை உள்ளது எனவும் தெரிவித்தார். 
ஆணவம் மிக்கவர்கள் ஒன்றுமில்லாமல் போனார்கள் எனவும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாட்டுக்கு எனவும் பேசினார். 
மேலும், ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவே அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பேசினார்.