தைரியமுள்ள ஒரு ஆண்மகனாக இருந்தால் உரிய ஆதாரங்களுடன் எங்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அண்ணாமலை தயாரா என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
தைரியமுள்ள ஒரு ஆண்மகனாக இருந்தால் உரிய ஆதாரங்களுடன் எங்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அண்ணாமலை தயாரா என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீதும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் புகார் கூறி வரும் நிலையில் செந்தில்பாலாஜி இவ்வாறு காட்டம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக திமுக அரசையும் அதன் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தற்போது செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கு இடையே கருத்து மோதல் தீவிரமாக இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் தொகுதியில் மாஸ் காட்டிய இபிஎஸ்...!முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிந்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அப்போது மின் கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், மானிய கோரிக்கையில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மின்சாரத்துறையில் முறைகேடுகள் நடந்து வருவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இதையும் படியுங்கள்: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையிடுவதா..? யாரையும் அனுமதிக்க மாட்டோம்.. சீறிய ஜெயக்குமார்
தைரியமுள்ள ஒரு ஆண்மகனாக இருந்தால், திராணி இருந்தால் ஆதாரம் இருந்தால் அண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும், தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசி வருகிறார், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 677 பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, விரைவில் தமிழகம் முழுவதும் 2,500 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது, திருவாரூர் சேலம் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 இடங்களில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட உள்ளது, நாட்டிலேயே மிக குறைந்த மின் கட்டணம் தமிழகத்தில் தான் பெறப்படுகிறது.

அதிக அளவில் இலவச மின்சாரம் தமிழகத்தில் தான் வழங்கப்பட்டு வருகிறது, தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 8 மில்லியன் யூனிட் மின் தேவை உள்ளது. அதில் 26 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி வாயிலாக கிடைக்கிறது, ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது அதிமுகவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் அரை சதவீதம் மட்டுமே உயர்த்தி உள்ளோம், நிலைமை என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்றார். இதேபோல் இரவு நேரங்களில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பதற்கான சாட்சியோடு ஆதாரங்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
