அதிமுக அணிகள் இணைப்பு நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என்று இரு அணியினராலும் கூறப்படும் நிலையில், அணிகள் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி வழங்கக்கூடாது என்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என்றம் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது நியாயமாக நடைபெற வேண்டுமானால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் புதிய பதவியை ஏற்க கூடாது. அப்போதுதான் ஜெ. மரணம் குறித்து விசாரணை நேர்மையாக நடைபெறும். இந்த விசாரணை கமிஷனில் 2 நீதிபதிகள் இடம் பெற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் தனபால் முதல் அமைச்சராக வர தகுதியானவர், 

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணியினர் இணைவதற்கு பதவியும் வழங்கி பணமும் பெரிய அளவில் கைமாறி இருப்பதாக பேசப்படுகிறது என்றும், இதற்கான பேரம் பெருமளவில் துபாய், சிங்கப்பூரில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளார்.