தமிழகத்தில் தேசிய குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து திமுக மதிமுக இஸ்லாமிய அமைப்புகள் தினம் தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக தலைவர் வைகோ போன்றவர்கள் குடிமைச்சட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்கும் விதமாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

 


பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஸ்டாலினை கடுமையாக எச்சரித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
 
 நாகரீகமே இல்லாத நபர் ஸ்டாலின். இவர் இஸ்லாமியருக்காக வக்காலத்து வாங்குறாரரே..! அது அரபு நாகரீகம் தானே அது தெரியாத ஸ்டாலினுக்கு..? ஸ்டாலின்; மாதிரி மோசமான ஒரு நபரை நான் பார்க்கவே இல்லை.  அவர் இந்த மண்ணுக்கு எதிரி இந்த மண்ணோட கலாச்சாரத்துக் எதிரி. பண்பாட்டுக்கு எதிரி. குரான் அரபு மொழியில் ஓதுகிறார்கள.; நம்ம அதை குறை சொல்லவில்லை. மதம் வேறு: மொழி வேறு: இங்கு இருக்கும் முஸ்லீம்கள் தமிழர்கள்;;;: பேசும் மொழி தமிழ். குரான் ஓதுவதை யாரும் எதிர்க்கவில்லை.. இந்து மதத்தில் மட்டும் வேதங்கள்: ஆகமங்களை எப்படி எதிர்ப்பிங்க. தமிழ்நாட்டுல இருக்கிற தமிழர்களுக்கு மொழி தமிழ்: மதம் இந்து. குஜராத்துல இருக்குறவுங்களுக்கு மொழி குஜராத்தி: மதம் இந்து. ஆந்திராவில் இருப்பவர்களுக்கு மொழி தெலுங்கு: மதம் இந்து. 


தஞ்சை கோயில்ல குடமுழுக்கு தமிழ்மொழியில வேணும்னு போராடுறது யாரு ஜெய்னுல்லாபுதின்னா..? இல்ல டேவிட் மணியரசனா..? அகமது கபீரா உங்களுக்கெல்லாம் குடமுழுக்கு விசயத்தில் என்ன இருக்கிறது. இந்து மதம்ன்னா என்னவேண்டுமானாலும் பேசலாமா.? திமுக தி.கவாகவும்,  முஸ்லீம் லீக்காவும் மாறி போச்சு. அதுனால இனிமேல் ஸ்டாலின் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை ஆகியவற்றை கொச்சைப்படுத்தினாலோ, கேள்வி எழுப்பினாலோ அதற்கான விளைவை  சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.

T Balamurukan