Asianet News TamilAsianet News Tamil

சூர்யா காசு கொடுத்தால் அன்புமணி ஒதுங்கிவிடுவார்.. ராமதாஸ் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் வன்னியர் கூட்டமைப்பு.

பாமக பணத்திற்காகவும், பிளாக்மெயில் அரசியலுக்காகவும்தான் இந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள். சூர்யா ஏதாவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அமைதியாகி விடுவார்கள். 

If Surya gives money, Anbumani will step aside.The Vanniyar Federation, criticized Ramdas family.
Author
Chennai, First Published Nov 19, 2021, 12:19 PM IST

சூர்யா பணம் கொடுத்தால் பாமக இந்த போராட்டத்தில் இருந்து விலகி விடும் என்றும், ஆனால் வன்னியர் கூட்டமைப்பு சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,  ஜெய்பீம் திரைப்படத்தில் கேரக்டர் அசாசினேஷன் நடந்திருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டிகிறோம் என அக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என் ராமமூர்த்தி விமர்சித்துள்ளார். சூர்யாவுக்கு எதிரான பாமகவின் வன்முறை பேச்சுக்கள் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ஜெய்பீம், இதில் வன்னியர்கள் இழுவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.  அதேபோல வட மாவட்டங்களில் வன்னியர்கள் வலுவாக உள்ள பகுதிகளில் சூர்யாவின் ரசிகர் மன்றங்களை கலைத்து சூர்யாவுக்கு பாட்டாளி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மேற்கு மாவட்டங்களிலும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தாரின் திரைப்படங்களை திரையிட வேண்டாம் என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பாமக மாவட்ட செயலாளருமான அருள் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். If Surya gives money, Anbumani will step aside.The Vanniyar Federation, criticized Ramdas family.

சூர்யா-பாமக மோதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர் கோஷ்டியான வன்னியர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் பேட்டி கொடுத்துள்ளார். வன்னியர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஜெய்பீம் படத்தில் காட்சிகளின் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த படத்தில் அக்னி கலசத்தை வைத்து விட்டார்கள் என்று பாமக குற்றம் சாட்டுகிறது, ஆனால் இந்த படத்தில் கேரக்டர் அசாசினேஷன் நடந்திருக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறம், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது எங்கள் வாதம், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி சூர்யாவிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு கொடுக்கிறோம் என்று வன்முறையை தூண்டுகிறது. சூர்யா கொடுக்கும் 5 கோடி ரூபாயை பெற்று பார்வதிக்கு தருவோம் என்று கூறுகிறார்கள். நீங்கள் என்ன பார்வதிக்கு 5 கோடி வாங்கித் தருவது, அதை சூர்யாவை கொடுத்துவிட்டுப் போகிறார் என்றும், மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பாமக செய்வது ரவுடித்தனம், மிரட்டல் அரசியல் என்றும் விமர்சித்துள்ளார்.

பாமக பணத்திற்காகவும், பிளாக்மெயில் அரசியலுக்காகவும்தான் இந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள். சூர்யா ஏதாவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அமைதியாகி விடுவார்கள். ஆனால் வன்னியர் கூட்டமைப்பின் நோக்கம் அது அல்ல, எங்கள் சமுதாயம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் எங்கள் மனம் புண்பட்டுள்ளது. 1987ல் நடந்த போராட்டத்தில்  25 வன்னியர்கள் இறந்தார்கள், நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்தார்கள். அப்படி சமுதாயத்துக்காக இறந்தவர்களுக்கு ராமதாஸ் ஒன்றும் செய்யவில்லை.

If Surya gives money, Anbumani will step aside.The Vanniyar Federation, criticized Ramdas family.

என கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் மானநஷ்டஈடாக தான் பாமக சட்ட பூர்வமாக பணம் கேட்டிருக்கிறதே என எழுப்பிய கேள்விக்கு, மொத்தத்தில் பணம் கேட்பதே மிரட்டுவதற்காகத்தான். சூர்யாமீதான வழக்கை வாபஸ் வாங்குவதற்கு ஒரு தொகையை கொடுத்தால் வாங்கிக்கொண்டு அமைதியாக போய் விடுவார்கள். அவர்கள் கட்சி நடத்துவதே பணத்திற்காகத்தான், 25 பேர் குண்டு பாய்ந்து இருந்தார்களே அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை இந்த ராமதாஸ், இவர்களுக்காக பேசிய காடுவெட்டி  குருவுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை, சூர்யா மீது அவதூறு, சூர்யா மீது தாக்குதல், வன்முறை போன்றவற்றை பாமக நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வன்னிய மக்களை ஏமாற்றி அந்த மக்களின் உழைப்பை சுரண்டி, வன்னியர் சங்க சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர் என்றும், அவரால் வன்னிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் தொடர்ந்து பாமக வையும் அதன் நிறுவனத் தலைவர் ராமதாசையும் விமர்சித்து வருபவர்  வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி என்பது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios