Asianet News TamilAsianet News Tamil

சீமான் இப்படியே பேசினால் நிச்சயம் கலவரம் வெடிக்கும்... காவல் ஆணையரிடம் கதறிய காங்கிரஸார்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆர்டிஐ பிரிவு தலைவர் கனகராஜ் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்றை கொடுத்தார். 

If Seeman speaks like this, riots will definitely erupt ... Congressman who shouted at the Commissioner of Police.
Author
Chennai, First Published Oct 13, 2021, 1:01 PM IST

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குறித்தும், காங்கிரஸார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும், அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த 10ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டார். 

If Seeman speaks like this, riots will definitely erupt ... Congressman who shouted at the Commissioner of Police.

இதையும் படியுங்கள்: கோட் சூட்டுடன் ஹாலிவுட் ஹீரோபோல வந்த நம்ம ஆளுநரா இது..? கெத்தா வேட்டி சட்டையில் கலக்கும் மாஸ் புகைப்படம்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆர்டிஐ பிரிவு தலைவர் கனகராஜ் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தும், காங்கிரசார் குறித்தும் அவதூறாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருக்கிறார். அவரின் பேச்சால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனகராஜ், கடந்த 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸ் கட்சி குறித்தும், ராகுல் காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி ஆகியோர் குறித்தும் மிகவும் அவதூராகவும் இழிவான கருத்துக்களையும் கூறினார்.

If Seeman speaks like this, riots will definitely erupt ... Congressman who shouted at the Commissioner of Police.

இதையும் படியுங்கள்:  தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. அடித்து ஊற்றபோகுதாம்.

மேலும் சீமான் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார், இது மிகவும் கண்டனத்துக்குரியது, அவரின் பேச்சு தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விலைவிப்பதாக உள்ளது, மக்களிடையே வேறுபாட்டை ஏறபடுத்தி, ஒற்றுமையை சீர்குலைக்கும் சீமானின் செயலை தடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில், தேர்தல் ஆணையத்தில், டிஜிபி அலுவலகம்த்தில், சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சீமான் இனி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிக்கவும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்போது கனகராஜ் வலியுறுத்தினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios