Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. அடித்து ஊற்றபோகுதாம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும்  புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,

Warning to the people of Tamil Nadu .. The people of this district should be alert for the next 4 days .. heavy rain alert.
Author
Chennai, First Published Oct 13, 2021, 1:29 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும்  புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

14.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 

இதையும் படியுங்கள்: ஒத்த ஓட்டு வாங்கியவர் பாஜககாரர்தான்... ஆனால் அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை.. அண்ணாமலை பகீர்.

Warning to the people of Tamil Nadu .. The people of this district should be alert for the next 4 days .. heavy rain alert.

15.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்., ஈரோடு,  சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

16.10.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், , கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

Warning to the people of Tamil Nadu .. The people of this district should be alert for the next 4 days .. heavy rain alert.

17.10.2021: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக    மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

குறிப்பு : அடுத்த 24 மணி  நேரத்தில் அந்தமான்  மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திர- ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

Warning to the people of Tamil Nadu .. The people of this district should be alert for the next 4 days .. heavy rain alert.

இதையும் படியுங்கள்: தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சமஸ்கிருத மந்திர பூமிபூஜை எதற்கு.. தமுஎகச கண்டனம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள் 14.10.2021 முதல் 16.10.2021 வரை: தென் மேற்கு வங்க கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகள் 13.10.2021 முதல் 15.10.2021 வரை : தென் கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios