Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சமஸ்கிருத மந்திர பூமிபூஜை எதற்கு.. தமுஎகச கண்டனம்

ஆதிச்சநல்லூர்  புளியங்குளம் பகுதியில்  ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. 

Why the Sanskrit Mantra Bhoomipooja for the Archaeological Museum of Tamils .. Ta.mu.e.ka.sa condemnation
Author
Chennai, First Published Oct 13, 2021, 11:05 AM IST

தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமிபூஜை எதற்கு? என்றும் நெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்று உச்சத்தில் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை அவமதிக்கும் வகையில் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ள என்றும் தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அச்சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Why the Sanskrit Mantra Bhoomipooja for the Archaeological Museum of Tamils .. Ta.mu.e.ka.sa condemnation
இதையும் படியுங்கள்:  பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஆதிச்சநல்லூர்  புளியங்குளம் பகுதியில்  ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. தொல்லியல் இயக்குனரும் திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளருமான அருண்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு புரோகிதர்களை வைத்து குறிப்பிட்டதொரு மதச்சார்பான சடங்குகளுடன் கூடிய பூஜையாக  நடத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓர் ஊழியராகிய அவர் அரசு நிகழ்வை இவ்வாறு மதச்சார்பான பூஜையாக  நடத்தியுள்ளது அரசமைப்புச் சட்டத்திற்கும் நடத்தைவிதிகளுக்கும் புறம்பானது என தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. 

Why the Sanskrit Mantra Bhoomipooja for the Archaeological Museum of Tamils .. Ta.mu.e.ka.sa condemnation

இதையும் படியுங்கள்: ஒத்த ஓட்டு வாங்கியவர் பாஜககாரர்தான்... ஆனால் அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை.. அண்ணாமலை பகீர்.

ஆரியக் கடவுள்களும் வேதமயப்பட்ட சடங்குகளும் சமஸ்கிருத மந்திரங்களும் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்று உச்சத்தில் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை அவமதிக்கும் வகையில் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios