எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்திரன் ஹீரோ ரஜினிகாந்த் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது தமிழக அரசியலில். தேசிய அரசியல் கூட சூப்பர்ஸ்டாரின் திசை பார்த்துதான் சுழல துவங்கியுள்ளது. என்னதான் தமிழருவி மணியன் ‘ஏப்ரல் 14ல் கட்சி உதயம்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டாலும் கூட, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?! என்பது இன்னும்  மிகப்பெரிய பட்டிமன்றமாகதான் இருக்கிறது. இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்? யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? யாருக்கு சிக்கல்? யாருக்கு விக்கல்? என்று சர்வேக்களே தடதடன்னு தட்டி எறிகின்றன. அந்த வகையில், தி.மு.க.வின் புதிய அரசியல் வழிகாட்டியான பிரஷாந்த் கிஷோரின் லிங்கில் இருக்கும் ஒரு அமைப்பு ஒன்று ரஜினி பற்றிய சர்வே ஒன்றை தமிழகத்தில் நடத்தியிருக்கிறது. அந்த சர்வேவின் ரிசல்ட் அதிகாரப்பூர்வமற்ற முறையில் லீக் செய்யப்பட்டுள்ளது. பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழொன்று Exclusive ஆக அதன் முக்கிய அம்சங்களை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள கேள்வி பதில்களில் சில செம்ம ஹைலைட்டானவை. அதிலும் ‘ரஜினி அரசியலுக்கு வந்தால், கமலுக்கான செல்வாக்கு எப்படி இருக்கும்?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. 


அதற்கு ’சூப்பரா இருக்கும்! அவிய்ங்க ரெண்டு பேரும் பல வருஷமா நண்பய்ங்க தானே! அவிய ரெண்டு பேரும் சேர்ந்து அரசியல் பண்ணினாக்க நாங்க வாக்குகளை அள்ளிப் போடுவோம்லா! இதைத்தானே ரஜினியும், மிக அதிகமா கமலும் விரும்புறாக. ரசினி அரசியலுக்கு வந்தால் கமலின் செல்வாக்கு அதிகரிக்கத்தான் செய்யும்!’ என்றெல்லாம் பதில் கிடைத்திருந்தால் மக்கள் நீதி மய்யம் மனம் குளிர்ந்திருக்கும்.  ஆனால் கிடைத்த பதிலோ நேர் எதிரிடையாக உள்ளது. ஆம் ”ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாக்க கமல்ஹாசனுக்கு ஓட்டு போடாம, ரஜினிக்குதான் ஓட்டு போடுவோம்.

 கமலை புரிஞ்சுக்கவே முடியாது. அவரு அரசியலுக்கு வந்ததில் ஒரு உண்மை இருக்குற மாதிரி தெரியலை. தனி மனித வாழ்க்கையில் பாராட்ட முடியாத அந்த மனுஷரை தலைவராக பார்க்க முடியலை. அதனால ரஜினியா? கமலா?ன்னு கேட்டால், எங்க வாக்கு ரஜினிக்குதான்.” என்றே 99% பேர் சொல்லியிருக்கின்றனர். ஆக இதைத்தான், ‘ரஜினி அரசியலுக்கு வந்தால், கமலின் செல்வாக்கு காலியாகிவிடும்!’ என்று ஒற்றை வரியில் ஊத்தி மூடுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
ஹாங்!

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!