பிரபாகரன் நலமுடன் இருப்பதாக என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை... வைகோ கருத்து!!
பிரபாகரன் நலமுடன் இருப்பதாக என்னிடம் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் நலமுடன் இருப்பதாக என்னிடம் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முன்னதாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து பிரபாகரன் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?
அந்த வகையில் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக என்னிடம் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு... தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார்!!
தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.