நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த திமுக அரசால் கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சவால் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப்பேசிய அவர், ‘’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம். வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் வட மாவட்டத்தை சேர்ந்த திமுகவை சேர்ந்த அமைச்சர் அவரை தொடர்புகொண்டு 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தை தற்கொலை செய்ய தூண்டியது திமுக தலைமையிலான அரசு. லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பின்னர் வெங்கடாசலத்துடன் அவரது மகன் மற்றும் மனைவிக்கு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதேபோல் அவர் சொந்த ஊருக்கு சென்றபோது அங்கு உறவினர்கள் ரெய்டு குறித்து கேட்டதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது தற்கொலைக்கு உண்மைக்காரணம் என்ன? அவரது அறையில் ஏதாவது கடிதம் உள்ளதா? அவரது செல்போனில்ஏதாவது தகவல் இருக்கிறதா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்:- " ஸ்டாலின் ஆட்சிக்கு டிங்குடி டிங்காலே "... : திமுக அரசை பயங்கரமா கலாய்த்த ஜெயக்குமார்.
இந்நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னர் அரசியல் ஒளிந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். வெங்கடாசலம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி தற்கொலைக்கான உண்மை காரணத்தை வெளியில் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசியவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் ஒரு மர்மதேசம் போல விளங்கிக் கொண்டிருக்கிறது, உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் அச்ச உணர்வோடு பணியாற்றும் நிலை உள்ளது.
தமிழகத்தில் ஏதோ ஒரு நாடகத்தை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சியினரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலத்தை ராஜினாமா செய்ய வேண்டுமென திமுக வற்புறுத்தியது, அவர் அதை மறுத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டதாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, 
எனவே இதில் தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே இதை சிபிஐ விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு உயர் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டி வருகிறது. அடிபணியாத அதிகாரிகள்மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்து சோதனை நடத்தி வருகிறது. அதுபோன்று அச்சுறுத்தல் கொடுத்ததால்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது’’ என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
