குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சியால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தனது கட்சியில் சேருமாறு அழைப்பு விடுக்கிறார். மற்றொரு தலைவர் 6 ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்த பின்னரும் வெறும் நடிகையாக மட்டுமே பார்ப்பதாக கூறுகிறார். கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் அங்கு மரியாதை இல்லை. 'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ்.

முத்தலாக் கொண்டு வந்தபோதும் காங்கிரசில் இருந்து வாழ்த்தினேன். தமிழகத்தில் எனக்கு முன்பாக பாஜகவில் உழைத்து வருகிறார்கள். மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள். நான் உடனே போட்டியிட போவதாக கூற முடியாது'' என்று தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மூளை வளர்ச்சி இல்லை என்பதா? வந்தேறிகளுக்கு தெரியுமா வரலாறு.?  கரையான்கள் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல், காங்கிரசின் வரலாறு தெரியாத வந்தேறி ஒன்று எடுத்த எடுப்பிலேயே அகில இந்திய பதவி பெற்ற ஒன்று துவக்கத்திலேயே நேரடியாக நேரு குடும்பத்தைதிட்டி இருக்கிறது. மதப்பூனைகளுடன் நின்று, மனசாட்சியை கொன்று நம் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத காங்கிரஸ் என்று சொல்லுமளவுக்கு இருந்தால், வழி வழி வந்த நம் மறத்தனம் எங்கே? என்று பதிலடி கொடுத்து இருந்தது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு ஆதரவாளர்கள், ’’குஷ்பு வந்தேறி என்றால் சோனியா யார்?’’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.