ஒருவேளை தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றால் நாட்டை  விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஜோதிடன் வெற்றிபெற்றால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் என அவர் எச்சரித்துள்ளார்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் -3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கொரோனாவுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அதிபர் ட்ரம்ப் தற்போது குணமடைந்து பிரச்சார களத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் புளோரிடாவில் குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியில் ட்ரம்ப் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜோ பைடன அமெரிக்காவை கம்யூனிச நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளார். 

ஒருவேளை அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு அதிகரிக்கும் என்றார். புலம்பெயர்ந்தோரால் நாட்டில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அவர் எச்சரித்தார். பிடன் வெற்றி பெற்றால் இன வேறுபாடு எந்த அளவிற்கு தலைதூக்கும் என்றும், பிடன் வகுத்துள்ள சதித்திட்டங்கள் என்னென்ன என்பது குறித்தும் ட்ராம் விவரித்து பேசினார். அப்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் மற்றும் அவர்து குடும்பம் ஒரு கிரிமினல் கும்பலை போன்றது என ட்ரம்ப் கடுமையாக சாடினார். இது மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்து சமூக விரோதிகளை அமெரிக்காவில் கொடியேற்றி அதன் மூலம் நாட்டில் குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய பிடன் திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மொத்தத்தில் குற்றச் சம்பவங்களால் அமெரிக்கா நிரம்பியிருக்கும் என்ற அவர், சோமாலிய-அமெரிக்க ஜனநாயக கட்சி எம்பி இல்ஹான் உமரையும் கடுமையாக விமர்சித்தார். 

பெரும்பாலான ஊடகங்கள்பொதுமக்களின் எதிரியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார், ஒரு கட்டத்தில் உணர்ச்சி பூர்வமாக பேசிய அவர், நான் ஒரு வேளை தேர்தலில் தோற்றால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சில நொடிகள் மௌனம் காத்த அவர், நான் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று பின்னர் கூறினார்.இதே வேளையில் மிச்சிகனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், மெக்ஸிகனில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

அப்போது ட்ரம்பை விமர்சித்த அவர், வைரஸ் ஒரு அதிசயம் போல மறைந்துவிடும் என்று  ட்ரம்ப் தொடர்ந்து பொய் கூறி வந்த நிலையில், அது நாட்டில் வேகமாக பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு மோசமான வடிவத்தை அது எட்டியிருக்கிறது என கூறினார்.