ஈரோடு தேர்தலில் இபிஎஸ் டெபாசிட் வாங்கவில்லையென்றால் கட்சியை ஓபிஎஸ்யிடம் ஒப்படைக்க வேண்டும்- புகழேந்தி அதிரடி

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்கவில்லையென்றால் அதிமுகவை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

If EPS loses in the Erode elections the party should be handed over to OPS said Pugazhendi

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை

சமூகவலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகவும், தான் இறந்து விட்டதாக முகநூலில் பதிவு செய்து கேலி செய்வதாக  டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என தெரிவித்தவர், பிஜேபிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருப்பதாக தங்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியிடம் நாங்கள் கௌரவமாக உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எனவே தான் பாஜகவுடன் நல்லுறவோடு இருக்கிறோம்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் நடந்தவர்கள் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என கூறினார். 

முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர்! தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிடிவி

If EPS loses in the Erode elections the party should be handed over to OPS said Pugazhendi

ஜெயக்குமாரை கண்டு பயந்து ஓடும் பெண்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை திரும்ப பெற்று உள்ளதாகவும் கூறினார். உச்சநீதிமன்றத்தின் வாக்குறுதியின் படி நாங்கள் நடந்து கொண்டு உள்ளதாகவும் ஆனால் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சரியாக நடந்து கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  காமக்கொடூரன் எனவும் பெண்கள் அவரைக் கண்டால் பயந்து ஓடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். 

If EPS loses in the Erode elections the party should be handed over to OPS said Pugazhendi

கட்சியை ஓபிஎஸ்யிடம் ஒப்படைக்கனும்

ஏற்கனவே நடைபெற்ற பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி தேர்தலில் இரட்டை இலை வைத்து 90% இடங்களில் தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளதாக கூறினார்.   இரட்டை இலை சின்னத்தை வைத்து கட்சியை நாசம் செய்து விட்டதாவும் குற்றம்சாட்டினார்.  ஈரோடு இடை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் அதிமுக அலுவலக சாவியை ஓ பி எஸ்யிடம் கால் அடியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் புகழேந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

மாணவ, மாணவிகளை போலி வாக்குறுதியால் ஏமாற்றியுள்ளது திமுக அரசு... நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios