Asianet News TamilAsianet News Tamil

"ஜெ" குறித்து "ரீல்" விட்டா "அரஸ்ட்ன்னு" சொன்னாங்களே யுவர் ஆனர்..! இப்போ ...

if anyone spreads negative news about jayalalitha will be arrested
if anyone spreads negative news about jayalalitha will be arrested
Author
First Published Sep 26, 2017, 6:42 PM IST


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சையில் இருந்த போது, அம்மா நலமாக இருக்கிறார்.அவர் இட்லி  சாப்பிட்டார்,தண்ணீர் குடித்தார்,வாகிங் செல்கிறார், கட்டை விரலை காண்பித்தார்  என பலரும் வாய் கிழிய தொடர்ந்து பேட்டி அளித்து வந்தனர்.

அதே வேளையில் சமூக வலைத்தளங்களில்,ஜெ உடல் நிலை மிக மோசமாக  உள்ளது என்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இவ்வாறு கருத்து தெரிவித்து வந்தவர்கள் மீது,கடும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அதிமுகவின் சார்பாக புகார்அளிக்கப்பட்டது.அதாவது, தேவையற்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

ஆனால் அன்று வதந்திகள் என சொல்லப்பட்டவற்றை  உண்மை என்று நிரூபிப்பதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்...

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஓராண்டை சென்ற வாரம் நினைவு கூர்ந்தனர் அதிமுக.,வினர்.  இப்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக மாறி மாறி அமைச்சர்களும்,எம்எல்ஏக்களும் தற்போது உண்மையைச் சொல்வதாக ஒரு கருத்தைச்  சொல்லி  வருகின்றனர்

அதாவது அம்மா இட்லி சாப்பிட்டார், தண்ணீர் குடித்தார் என சொன்னது எல்லாமே பொய், நாங்கள் யாரும் அம்மா அப்படி சாப்பிட்டுப் பார்க்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன்   சென்ற வாரம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து வரிசையாக அமைச்சர்கள் அதே த்வனியில் பேசி வருகின்றனர்...

அடுத்த படியாக, பொன்னையனும் "நானும் அம்மாவை நேரில் பார்க்கவே இல்லை என  தெரிவித்தார். இதற்கு அடித்த படியாக கே.சி.வீரமணி மற்றும் தினகரன் ஆதரவு வெற்றிவேல் கூட நான் அம்மாவைப் பார்க்கவில்லை. எங்களிடம் என்ன சொன்னார்களோ அதனையே  நானும் சொல்லிவிட்டேன்” எனப் போட்டு உடைத்தார்.

சி.ஆர்.சரஸ்வதி, சொல்லவே வேண்டாம் போங்க.....உங்கள் அனைவருக்குமே தெரியும்... அவரால் எந்த  அளவிற்கு பொய்களை  வாரி வாரி இறைக்க முடியுமோ ..அந்த அளவிற்கு பேசிவிட்டார். இப்போது பேசுவதற்கே அவர் தயங்குகிறார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.. எந்த அளவிற்கு அவர் ரீல் விட்டு இருக்கிறார் என்பதை....

ஆக மொத்தத்தில்,அம்மாவைக் குறித்த வதந்திகள் பரப்பியது யார் என்ற கேள்வி இப்போது  எழுந்துள்ளது. அதாவது, ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்திகளைப் பரப்புபவர் மீது  நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

ஆனால், அப்படி அவர்கள் சொன்னது உண்மைதான்...நாங்கள் அனைவரும் சேர்ந்து சொன்னதுதான் பொய் என்ற ரீதியில், தற்போது அதிமுக.,அமைச்சர்கள்  கூறி வருகின்றனர்.....அதாவது  உண்மையில் வதந்திகளைப் பரப்பியவர்கள் இவர்கள் தானே....இவர்கள் மீது பாயுமா  நடவடிக்கை என ? சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பு : ஜெ மருத்துவமனையில் இருந்த போது  நடந்தவை ... உங்கள் பார்வைக்கு

(வாட்ஸ்-அப், யுடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். இப்படி பரப்பப்படும் வதந்தி காட்டுத்தீ போல பரவி சில நிமிடங்களிலேயே பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்பியதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் மொத்தம் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களை அளித்ததின் பேரில் இந்த வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 2 வழக்குகளில் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுத்து சதீஷ்குமார், மாடசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதி 41 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தொடர்புடையவர்களையும் படிப்படியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது)

Follow Us:
Download App:
  • android
  • ios