Asianet News TamilAsianet News Tamil

துக்ளக் பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளியாம் !! ரஜினிகாந்த் சொல்கிறார் !!

முரசொலி  பத்திரிக்கையை கையில் வைத்திருந்தால்  அவர்கள் திமுக என்பார்கள்… அதேபோல துக்ளக் வைத்திருந்தால்  அவர்கள் அறிவாளி என்பார்கள் என்று  துக்ளக் பத்திரிக்கை 50 ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
 

if anybody have thuglug he is a genius told rajinikanth
Author
Chennai, First Published Jan 14, 2020, 9:07 PM IST

துக்ள்க் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று  நடைபெற்றது. இந்த விழாவில்  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து பேசிய  ரஜினிகாந்த், சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி கொண்டு செல்கிறார் என்று பாராட்டினார்..

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; என்றாலும் இதுவும் ஒரு தந்தைக்குரிய பதவியே என்று ரஜினிகாந்தி வாழ்த்தினார்.

if anybody have thuglug he is a genius told rajinikanth

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என தெரிவித்த ரஜினிகாந்த், தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர்  ஒருவர் அவசியம் தேவை என குறிப்பிட்டார்.

if anybody have thuglug he is a genius told rajinikanth

கவலைகள் நம் வாழவில் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது என குறிப்பிட்ட அவர், பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என தெரிவித்தார்.

ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும்  தண்ணீரை கலந்துவிடக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்தி கேட்டுக் கொண்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios