சென்னையில் காலை உணவுகளான இட்லி, தோசை, வடை உற்சாகம் அளிக்கக்கூடியது என ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், தமிழக பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர், சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த 'இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது, தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது என்றார். ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கும் எனது மானமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஒவ்வொருவரும் ஒரு வெற்றியாளர்கள் தான். இந்திய மாணவ நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஏனென்றால் பல சவால்களை சந்திக்கிறீர்கள். பல நாடுகளின் மாணவர்களின் யோசனைகளை பரிமாறிக்கொள்ள ஹேக்கத்தான் உதவுகிறது. சிங்கப்பூர் தொடர்ந்து இந்தியாவுடன் பணியாற்ற வேண்டும். ஹேக்கத்தான் என்பது இளம்தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.