சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்த பெண்ணியவாதி திருப்தி தேசாயை அங்கிருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் தடுத்தி நிறுத்தியதையடுத்து அவர் திரும்பிச் சென்றார். அப்போது இப்போ போறேன்… ஆனால் திரும்பி வருவேன் என திருப்தி தேசாய் சவால் விடுத்துள்ளார்.

மண்டலபூஜை, மகரவிளக்குபூஜைக்காகசபரிமலைகோவில்நேற்று திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்டபெண்களைஅனுமதிஅளிப்பதற்குஎதிராகபோராட்டம்தொடரும்நிலையில்பெண்ணியவாதியானதிருப்திதேசாய்சபரிமலைகோவிலுக்குள்செல்வேன்என்றுஅறிவித்தார்.

அதன்படிகாலை 4:30 மணிக்குகொச்சிவிமானநிலையம்வந்தார். விமானநிலையத்தில்இருந்துஅவர்வெளியேசெல்ல முடியாதவகையில்போராட்டக்குழுவினர்குவிந்தனர். அங்குபாதுகாப்புஏற்பாடுகளும்செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள்பெருமளவுதிரண்டதால்திருப்திதேசாயைபோலீசார் வெளியேஅனுமதிக்கவில்லை. 12 மணிநேரமாகதேசாய்வெளியேறமுடியாதநிலைஏற்பட்டது.

அய்யப்பபக்தர்கள்சரணகோஷம்எழுப்பிபோராட்டம்மேற்கொண்டனர். தொடர்ந்துபக்தர்கள்விமானநிலையம்செல்லும்நிலைகாணப்பட்டதுஇதையடுத்து 12 மணிநேரத்திற்குமேல்விமானநிலையத்தில்இருந்ததிருப்திதேசாய்புனேதிரும்பமுடிவுசெய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், எங்களுக்குஉதவிசெய்யக்கூடாதுஎனடாக்சிடிரைவர்களைபாஜகவினர் மிரட்டியுள்ளனர். எங்களுக்குஇடம்வழங்கினால்ஓட்டல்களைஅடித்துநொறுக்குவோம்எனமிரட்டப்பட்டுள்ளது.

எங்களுக்குதொல்லைக்கொடுக்கும்மற்றும்மிரட்டும்மக்கள்தங்களைஅய்யப்பபக்தர்கள்என்றுசொல்லிக் கொள்வதைபார்ப்பதுஎன்னைகவலையடையசெய்துள்ளதுஎன கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இப்போதைக்கு நான் திரும்ப போறேன் ஆனால் சட்டப்படி நான் திரும்ப வருவேன் என சவால்விட்டுச் சென்றுள்ளார்..