காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். 

தேசியச் செயலாளர் பதவியில் இருந்துவந்த ஹெச்.ராஜா அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறாதது தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்தால் அவரை தான் வரவேற்பதாகவும் திமுகவில் இருந்து விலகி 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு அக்கட்சி சார்பில் அவர் எதிர்பார்த்ததாக கூறப்படும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுகள் தற்போது வரை வழங்கப்படவில்லை.இதனால் அதிருப்தியில் இருந்து வந்த குஷ்பு உள்ளுர் அரசியல் மத்திய அரசியலிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.எனவே குஷ்பு பாஜகவில் சேர தயாராக இருப்பதாகவும் அவரை எப்படியாவது பாஜக பக்கம் இழுக்க வேண்டும் என்று காய்நகர்த்தி வருகிறது தமிழக பாஜக.


முன்னதாக, பாஜகவுக்கு ஏதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்த குஷ்பூ, தற்சமயம் வேளாண் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்காமல் அமைதி காத்துவருகிறார். சமீபத்தில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.