ரஜினியோட அத்தனை சீக்ரெட்ஸும் என் கையில! ஒவ்வொண்ணா போட்டு உடைப்பேன்: மிரட்டும் கருணாஸ்?
ஒரு வகையில் ரஜினியை பார்த்தால் பாவமாகத்தான் இருக்குது. சூப்பர் ஸ்டாரான அவர் கூட ஜோடி சேர்ந்து ஒரு படமாவது நடிக்கணும்! அப்படின்னு நடிகைகளும், தலைவர்கிட்ட அடிவாங்குற காட்சியில நடிச்சா கூட போதும், ஆனா அவர் படத்தில் நான் இருக்கணும். அவ்ளோதான்! என்று நடிகர்களும் புதுமுகமாக இருக்கையில் பேசுவார்கள்.
ஒரு வகையில் ரஜினியை பார்த்தால் பாவமாகத்தான் இருக்குது. சூப்பர் ஸ்டாரான அவர் கூட ஜோடி சேர்ந்து ஒரு படமாவது நடிக்கணும்! அப்படின்னு நடிகைகளும், தலைவர்கிட்ட அடிவாங்குற காட்சியில நடிச்சா கூட போதும், ஆனா அவர் படத்தில் நான் இருக்கணும். அவ்ளோதான்! என்று நடிகர்களும் புதுமுகமாக இருக்கையில் பேசுவார்கள்.
ரஜினியோடு நடித்தோ நடிக்காமலோ, இண்டஸ்ட்ரியில் வளர்ந்த பின், ஏதோ ஒரு பிரச்னையில் அவர்களே ரஜினியை போட்டு பொளப்பார்கள் விமர்சனத்தில். இது இன்று நேற்றல்ல, வெகு காலமாக நடந்து வருகிறது சினிமாவில். ரஜினியும் இதையெல்லாம் சிரித்தபடியே கடந்துவிடுகிறார்.
ஆனால், தற்போது அரசியலுக்குள் வர இருக்கும் ரஜினிக்கு இந்த மாதிரியான துரோக வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாய் மனதில் குத்துகின்றன. ஒரு காலத்தில் தன்னோடு நடிப்பதற்காக தவம் கிடந்தவர்கள் எல்லாம், இன்று ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்துகொண்டோ அல்லது கட்சிக்கு ஆதரவாக இருந்துகொண்டோ தன்னை மிக மோசமாக வர்ணிப்பதை அவரால் கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை, தாங்கிக் கொள்ள முடியவுமில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாடகர் கருணாஸ். பாபா படத்தில் அவருக்கு ரஜினியின் நண்பர்களில் ஒருவராக வேடம் கிடைத்தபோது, புல்லரித்துப் போய் பேசினார் சூப்பர் ஸ்டாரை. அதன் பின் எந்திரன் படத்திலும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அப்போதும் ரஜினியை துதித்துக் கொண்டுதான் இருந்தார்.
ஆனால் கடந்த 2016-ல் ஒரு கட்சியை துவக்கி, சசிகலாவின் ஆசிர்வாதத்தின் வழியே அ.தி.மு.க. கூட்டணியில் சீட் கிடைத்து எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார் கருணாஸ். அதன் பின் அவரது ரேஞ்சே வேற லெவலில் ஆகிவிட்டது. ’ரஜினி மட்டுமில்லை எங்க கருணாஸும் தலைவர்தாண்டா. அரசியலுக்கு வந்த ஜோரிலேயே எம்.எல்.ஏ.வான இவர்தான் ரியல் தலைவர்!’ என்று அவரது கட்சி உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் ரஜினியை வம்புக்கிழுப்பது வாடிக்கை. ஆனால் இதை ஒரு நாளும் கண்டித்து திருத்தாத கருணாஸ் இப்போது தானே ரஜினிக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில்...”கமலும், ரஜினியும் அரசியலில் இணைவார்களா? அப்படின்னு கேக்குறாங்க. சினிமாவுலேயே அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நடிக்க மாட்டாங்க. அதற்கு காரணம், சம்பளம்னு அவங்களே சொல்லியிருக்காங்க. அரசியல்ல ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தால் அது பெரிய விஷயம்தான். ஆனா அது நடக்குறது ரொம்ப கடினம்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்றேன்! வர்றேன்!ன்னு புலி வருது கதை சொல்லிட்டு இருக்கிறார். ஆனா இன்னும் வந்தபாடில்லை. அவரு அரசியலுக்கு முதல்ல வரட்டும், அப்புறம் தெரியும் என்னைப் பத்தி. ரஜினியோட எல்லா ரகசியங்களும் எனக்கு தெரியும். அவை அத்தனையையும் வரிசையா அம்பலப்படுத்துவேன். இது உறுதி.” என்று விளாசியிருக்கிறார்.
ரஜினி மீது அப்படி என்ன கோபம் கருணாஸுக்கு? அவரால் எந்த வகையில் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. அல்லது யாராவது கருணாஸை தூண்டுகிறார்களா ரஜினிக்கு எதிராக?.....என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சொல்லுங்க லொடுக்கண்ணே!