எம்எல்ஏ கருணாஸ் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 
 
கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. பின்னர் இவர் மீது நுங்கம்பக்கக்ம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பொது அமைதிக்கு ஊரு விளைவிக்கும் வகையில், அவதூறாக பேசுவது, மிரட்டல் விடுக்கும் விதமாக பேசுதல் மற்றும் கொலை முயற்சி என பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு  உள்ளது. பின்னர் அவர் தலைமறைவானார் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து தான் தன சாலி கிராமம் வீட்டில் தான் உள்ளேன் என அவர் தெரிவித்து இருந்தார்.

அப்போது. "நான் 2009 ஆம் ஆண்டு முதல் கட்சி நடத்துகிறேன்..என் மீதோ அல்லது கட்சி மீதோ எந்த வழக்கும் இதுவரை பதிவானது கிடையாது. ஆனால் என்னுடைய உரையை ஊடகங்கள் ஆங்காங்கு கட் செய்து ஒரு தொடர்ச்சி இல்லாமல் வெளியிட்டு உள்ளனர். இதனை பற்றி என் மனைவியிடம் அன்றே சொல்லி வருத்தப்பட்டேன். போலிசை பற்றி யார் யாரோ என்ன என்னமோ சொல்கின்றனர்..நான் எப்போதும் போலிசை பற்றி எதுவும் தவறாக பேசியது இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். மேலும், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக பேசியதை ஒரு அறிக்கையாக தேவைபட்டால் உயர்நீதின்ற நீதிபதியிடம் நான் சமர்ப்பிப்பேன்.

மேலும் நான் முதல்வரை தாக்குவேன் என கூறியதாக உயர் அதிகாரி முதல்வரிடம் தெரிவித்து உள்ளார். இதனை நான் கேள்விப்பட்டேன். இந்த விவகாரத்தை தான் நான் பொது மேடையில் பேசினேன். ஆனால் இதனை திணித்து ஊடகங்கள் தவறாக சித்தரித்து வெளியிடுகிறது என கூறினார்.