i will suicide when i joined with ops says nanjil sampath

தினகரனுக்கு ஆதரவாக பேசுவதற்கு மக்கள் என்னை காரிதுப்பினால் துடைச்சிருவேன் எனவும், ஒ.பி.எஸ் கிட்ட போகும் நிலை வந்தால் செத்துருவேன் எனவும் இன்னோவா சம்பத் கூறியுள்ளார்.

மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். அனைவரிடமும் வம்பை வரிந்து கட்டி இழுப்பவர் வைகோ. ஆனால் அவரிடமே வம்பை இழுத்து கொண்டு கட்சியை விட்டு வெளியேறினார் நாஞ்சில் சம்பத்.

பின்னர், ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். அவர் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு இன்னோவா காரையும் ஜெயலலிதா வழங்கினார்.

அதன்முதல் வெறும் சம்பத்தாக இருந்த நாஞ்சில் சம்பத் இன்னோவா சம்பத் என்ற சிறப்பு பெயரை பெற்றார்.

அதைதொடர்ந்து பல பேட்டிகளில் கட்சிக்கு எதிராக அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டு கட்சி தலைமையிடம் பல டோஸ்களை வாங்கி கொள்வார்.

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக இருந்த நாஞ்சில் சம்பத் அவரின் மறைவிற்கு பிறகு சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்.

தலைமை கழகத்திற்கு சென்று ஜெயலலிதா அளித்த காரையும் திருப்பி கொடுத்தார். இதனால் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றார்.

இதையடுத்து போக போக அப்படியே அந்தர்பல்டி அடித்தார். சசிகலாவிற்கும் தினகரனுக்கும் ஒ.பி.எஸ் சப்போர்ட் பண்ண ஆரம்பித்தார்.

தினகரன் குறித்து நேரிலும் தனது முகநூல் பக்கத்திலும் பெரிதும் ஆதரவு தெரிவித்தார்.

இவ்வாறு மாறி மாறி பேசும் நாஞ்சில் சம்பத்தை மக்கள் கண்டுகொள்ளத நிலையில், தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அதில் செய்தியாளர் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு :

கேள்வி : உங்களுக்கு டிடிவி தினகரன் நல்ல இருக்கனுமா அதிமுக நல்லா இருக்கனுமா ?

பதில் : தினகரன் நல்ல இருந்தாதான் அண்ணா திமுக நல்லா இருக்கும்.

கேள்வி : அறமும் நியாயமும் சசிகலா தினகரன் பக்கம் தான் உள்ளதா?

பதில் : ஆமாம் அவர்கள் பக்கம் தான் உள்ளது.

கேள்வி : சசிகலாவும் தினகரனும் தான் உங்கள் தலைவர்களா?

பதில் : ஆமாம் ஆமாம்...

கேள்வி : சூழலுக்கு தகுந்த மாதிரி மாறிக்கலாமா?

பதில் : சூழலுக்கு தகுந்தமாதிரி மாறிக்கனும்.

இப்படியெல்லாம் சொல்லிட்டிங்க... இத வெளில யாராது பார்த்துட்டு என செய்தியாளர் இழுக்க....

காரிதுப்பிடுவாங்களா? என அவரே கேள்வி கேட்டு கொண்டார்.

காரிதுப்பினா துடைச்சிடுவேன் என அவரே பதிலும் சொல்லி கொண்டார்.

கேள்வி : ஒருவேளை பன்னீர்செல்வத்திடம் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகினால்?

பதில் : செத்துடுவேன். தற்கொலை செய்து கொள்வேன்.