மக்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் முதல்வர். தனது முடியை பற்றி சிந்திக்கக் கூடியவர் ஸ்டாலின். நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் இந்த தேர்தலுக்குப்பின் ஏமாளியாகப் போகிறார்.
நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் இந்த தேர்தலுக்குப்பின் ஏமாளியாகப் போகிறார் என பால்வளத்தறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும் 2ஜி வழக்கை குறிப்பிட்டு, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கொள்ளையடித்த கட்சி திமுக என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக எம்.பி ஆ.ராசா 2 ஜி வழக்கு குறித்து கோட்டையில் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வரை அழைப்பது ஏன், நானே வருகிறேன் அது ராசாவானாலும் சரி, ஸ்டாலினாலும் சரி. மேலும் ஸ்டாலின் மற்றம் திமுக பல்வேறு விமர்சங்களை முன்வைத்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது பொம்மையை எரிக்க முயன்றனர். இதனிடடையே திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- நான் முன் விளைவுகள் பின் விளைவுகள் என அனைத்தையும் பார்த்தவன். முதலமைச்சரை குறை சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மக்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் முதல்வர். தனது முடியை பற்றி சிந்திக்கக் கூடியவர் ஸ்டாலின். நான் கோமாளி அல்ல. ஸ்டாலின் இந்த தேர்தலுக்குப்பின் ஏமாளியாகப் போகிறார். முதல்வர்களை தரக்குறைவாக விமர்சித்தால் தொண்டர்கள் நாங்கள் கேட்போம். முதல்வரை யார் விமர்சித்தாலும் இதை விட கேவலமான முறையில் நான் பதிலடி கொடுப்பேன். அனைவருக்கும் மரியாதை அளிப்பவன் நான். அவர்கள் தரம் தாழ்ந்து பேசியதால்தான் நானும் பேசினேன்.
அலைக்கற்றை வரிசையில் ஊழல் செய்தவர் ஆ. ராசா. திகார் ஜெயிலில் குடியிருந்த அவர். அழுக்கை வைத்துக் கொண்டு எங்களை விமர்சனம் செய்யக்கூடாது. அதே சமயம் அதிமுக கைப்படாத ரோஜா அல்ல. ஒரு சில தவறுகள் நடக்கலாம். அது தலைவரால் தண்டிக்கப்படும். தவறுகள் திருத்திக் கொள்ளப்படும். திமுக அழுகிப்போன தக்காளி கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது என்றார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 8, 2020, 2:07 PM IST