’அரசாங்க ஒப்பந்ததிலேயே ஊழல் செய்தவர்கள் அனைவரும் அச்சத்தில் ஒன்றிணைந்து உள்ளனர். இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என மதுரையில் மோடி சூசகமாக பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. 

மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. அதனை தொடர்ந்து பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார். அப்போது ’’தொன்மையான மதுரைக்கு வணக்கங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சற்று முன் நான் சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். ஏழைகளுக்கு எளிமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டள்ளன.  மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும்.

மூன்று மக்களவை தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.  தேசிய அளவில் மருத்துவமனைகள், மற்றும் மருத்துவ வசதிகள் அதிகரிப்படும். நோய்கள் வராமல் தடுக்கும் நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறோம். கிராமப்புற சுகாதாரம் 2014ம் ஆண்டில் 38 சதவிகிதமாக இருந்தது. இப்போது 98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 3520 தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே வழித்தடங்கள் இரு மடங்காக்கப்பட்டுள்ளது. தேஜஸ் விரைவு ரயில் மதுரை சென்னை இடையே விரைவில் இயக்கப்படும். தூத்துக்குடி துறைமுக முன்னேற்றத்துக்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே தூத்துக்குடி துறைமுகத்தை முன்னோடியாக மாற்றுவோம். விரைவில் டி18 அதிவேக ரயில்கள் நாடுமுழுவதும் இயக்கப்படும்.

 

டி18 ரயில் உற்பத்தி அதிகரிக்கும்போது வேலைவாய்ப்பும் தமிழக இளைஞர்களுக்கு அதிகரிக்கும். 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசியல் ரீதியாக எதிர்த்து வருகின்றனர். 

பட்டியல் சமுதாய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டே அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏழை மக்களை கருத்தில் கொள்ளாத எதுவும் நாட்டுக்கு பலனளிக்காது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் நீதியால் தண்டிக்கப் படுவார்கள். எதிர்மறை சக்திகளிடம் இருந்து இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அரசாங்க ஒப்பந்ததிலேயே ஊழல் செய்தவர்கள் அனைவரும் அச்சத்தில் ஒன்றிணைந்து உள்ளனர்’’ என அவர் பேசினார்.