தமிழ்நாட்டில் தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது… தமிழிசை அடிரடி!!

தமிழ்நாட்டில் தவறு நடந்தால் அதை திருத்தச் செய்வேன் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. 

I will enter both head and tail into tamilnadu and No one can stop me says Tamilisai

தமிழ்நாட்டில் தவறு நடந்தால் அதை திருத்தச் செய்வேன் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. இதுக்குறித்து விழா ஒன்றில் பேசிய அவர், ஆளுநரால் பலரையும் வேலை செய்ய வைக்க முடியும். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறேன். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்களே அதிகம். தமிழ்நாட்டில் கருத்து சொல்லிவிட்டால் மூக்கை நுழைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்து முறைப்படி நடந்த கருணாநிதி சிலை அடிக்கல் நாட்டுவிழா... அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சர்ச்சை!!

தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். யாரும் தடுக்க முடியாது. என்னை தெலங்கானாவில் அக்கா என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் நான் தமிழ்நாட்டின் அக்கா என்பதை மறக்கவே மாட்டேன். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஏதாவது தவறு நடந்தால் சுட்டிக்காட்டி திருத்தச் செய்வேன்.

இதையும் படிங்க: அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்... விருது பெற்றார் அமைச்சர் அன்பரசன்!!

என்னைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது. ஆளுநர் என்றாலே ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி. மக்களைப் பார்க்கக் கூடாது என நீதிபதி தெரிவித்ததாக நீதிமன்ற உத்தரவை காட்டுகின்றனர். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அப்படி இல்லை. தினசரி பணிகளில் தலையிடக் கூடாது என மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இன்றைக்கு இந்தப் பணியிலிருக்கிறேன் என்றால் அது மக்களுக்காக. எனது பங்கு அரசியல் இருக்கும் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios