Asianet News TamilAsianet News Tamil

நிலவரம் புரியாமல் கலவரம் செய்யும் காங்கிரஸ்... அந்த ஆளு உள்ளூர் ரவுடியாம்ல!

பிரதமர் பதவியின் மரியாதை குறித்து எனக்கு நன்கு தெரியும். நான் பிரதமர் மோடிக்கு எதிராக பேசவில்லை

I will beat Modi ... Congress rioting without understanding the situation ... That guy is not a local rowdy!
Author
Delhi, First Published Jan 18, 2022, 10:58 AM IST

 ‘என்னால் மோடியை அடிக்க முடியும், அவமானபடுத்த முடியும்’ என்று பேசும் மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாஜக செய்தித்தொடர்பாளர் ஷிஷாத் பூனாவாலா, பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி ஒரு சதித்திட்டம் என்பது தற்போது உங்களுக்கு தெரியும்’ என பதிவிட்டுள்ளார்.I will beat Modi ... Congress rioting without understanding the situation ... That guy is not a local rowdy!

மோடியை என்னால் அடிக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் கூறுவது போன்ற வீடியோ மராட்டிய அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பானது. இந்நிலையில், தான் பிரதமர் மோடியை பற்றி கூறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நானா படோலா, '’எனது தொகுதியில் உள்ள ஒரு உள்ளூர் ரவுடியின் பெயர் மோடி. அவரை பற்றியே தான் பேசினேன்’’ என தெரிவித்துள்ளார்.I will beat Modi ... Congress rioting without understanding the situation ... That guy is not a local rowdy!

இது தொடர்பாக நானா படோலா கூறுகையில், நான் எனது தொகுதியில் மோடி என பெயருடைய உள்ளூர் ரவுடி குறித்தே அவ்வாறு பேசினேன். பிரதமர் பதவியின் மரியாதை குறித்து எனக்கு நன்கு தெரியும். நான் பிரதமர் மோடிக்கு எதிராக பேசவில்லை’ என்றார்.  

ஏற்கெனவே பஞ்சாப் மாநிலம் , பதிண்டா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மோடியை என்னால்  அடிக்க முடியும், அவமானபடுத்த முடியும்’ என்று பேசும் மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பேசியது சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. என்னதான்  பெயர் ஒற்றுமையாக இருந்தாலும் நானே பட்டாலே தெளிவாக வேறுபடுத்தி பேசி இருக்க வேண்டும். சர்ச்சையான பிறகு விளக்கமளிப்பது  தன் மீதுள்ள தவறை பூசி மெழுகுவது போல் இருக்கிறது என பலரும் கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios