Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவின் செயல்பாடுகளை வரவேற்கிறேன்.. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, தில்லா பேசிய திருமாவளவன்.

தற்போதுள்ள நிலையில், அதிமுகவையும் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி தான் என்ற அவர், சசிகலாவின் செயல்பாடுகளை தான் வரவேற்பதாக கூறினார். அதிமுக பாஜகவுக்கு இணக்கமாக செயற்பட்டு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

I welcome the activities of Sasikala .. Thirumavalavan who spoke from the DMK alliance, guts.
Author
Chennai, First Published Oct 16, 2021, 4:25 PM IST

சசிகலா தற்போது எடுத்து வரும் செயல்பாடுகளை வரவேற்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவையும் அவர் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற பகீரத முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வரும் நிலையில், திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார். 

I welcome the activities of Sasikala .. Thirumavalavan who spoke from the DMK alliance, guts.

 

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமைக்கப்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் தன்னை உறுப்பினராக நிமித்தத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் மரியாதை செய்தார்.

இதையும் படியுங்கள்: அதிரடியாக வெளியில் வந்த சசிகலா..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நிச்சயம் சிறப்பாக செயல்படும், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த மாநில அளவில் எஸ்சி-எஸ்டி பிரிவுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அதை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. 

I welcome the activities of Sasikala .. Thirumavalavan who spoke from the DMK alliance, guts.

தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை இந்த ஆணையம் தடுக்கும் என நம்புகிறோம். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்றார். சசிகலா அவர்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும், அதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும் எனவும் திருமாவளவன் கூறினார்.

இதையும் படியுங்கள்: ஜெ சமாதியில் சசிகலா கண்ணீர்.. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என ஜெயக்குமார் நக்கல்.. அதிமுகவில் இடமில்லை என பதிலடி.

தற்போதுள்ள நிலையில், அதிமுகவையும் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி தான் என்ற அவர், சசிகலாவின் செயல்பாடுகளை தான் வரவேற்பதாக கூறினார். அதிமுக பாஜகவுக்கு இணக்கமாக செயற்பட்டு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். அதேநேரத்தில் சசிகலாவின் இந்த செயல்பாடு, காலம் தாழ்ந்த முயற்சி என்றும் அவர் கூறினார். 

I welcome the activities of Sasikala .. Thirumavalavan who spoke from the DMK alliance, guts.

எச்.ராஜா அவர்களின் பேச்சை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், பெரியார் குறித்தும், திமுக குறித்தும், அவதூறாக பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios