திமுக அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது. 

தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

நிறைவு விழாவில் பிரதமர் மோடி நேற்று காலை 11:00 மணிக்கு காணொலி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பாஜக விவசாய அணி சார்பில் இதைநாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமர் பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விவசாயிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நாமக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், தஞ்சையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் முருகானந்தம் தலைமையில் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இதனையடுத்து, தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்;- திமுக அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது. உடனடியாக போதை பொருள் விற்பனையை தடை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல் லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் இதுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதில் என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ரெய்டு நடத்துவது என்பது ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக அமைந்துள்ளது. அது தேர்தல் காலம் ஆகவோ அல்லது தேவைப்படும் காலமாகவோ இருக்க முடியும் என திமுக அரசு காத்துக் கொண்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கைவிட்டுவிட வேண்டும். சேர்த்து வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது கண்ணியமான செயல் அல்ல என்னை பொறுத்தவரை ரெய்டு நடத்துவது என்பதை பழிவாங்கும் செயலாகத்தான் பார்க்கிறேன். மேலும், ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போது, குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது யோசித்து நடவடிக்கை எடுப்பது போலீசாரின் கடமை. இல்லாவிட்டால் நடவடிக்கையை விட்டுவிட வேண்டும். இதைச் செய்யாமல் வாட்டுகிற விதமாக யூடியூபர் மாரிதாசை பழிவாங்கும் வகையில் செயல்படுகிற அரசு மக்களுக்கானதாகவோ, கருத்து சுதந்திரத்துக்கானதாகவோ இருக்க முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.